Sri Lanka

காலி மைதானத்தில் முதலில் துடுப்பாடுவது ஏன் சாதகமானது தெரியுமா?

காலி மைதானத்தில் முதலில் துடுப்பாடுவது ஏன் சாதகமானது தெரியுமா?

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடி வருகின்றது, இந்த காலி மைதானத்தில் முதலாவதாக துடுப்பாடுவது அதீத சாதகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் ஆடிய அணி, 16 டெஸ்ட்டில் 11 இல் வெற்றிபெற்றுள்ளது, 4 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும் நிறைவுக்கு வந்துள்ளன.

நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணிகள் 13 போட்டிகளில் 6 இல் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளன. காலி மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய 29 டெஸ்ட் போட்டிகளில் 17 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

2010 ம் ஆண்டுக்கு பின்னர் காலி மைதானத்தில் இலங்கை விளையாடிய 14 போட்டிகளில் 9 இல் வெற்றிபெற்றுள்ளது, ஏனைய மைதானங்களில் விளையாடிய 22 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளும், தோல்விகளையும் சந்தித்துள்ளது.

காலி மைதானத்தில் 4 வது இன்னிங்சில் பெறப்பட்ட வெற்றி ஓட்ட எண்ணிக்கை 99 என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலி மைதானத்தில் ஹேரத் விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 93 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

1 Comment

1 Comment

  1. மா.பிரபு

    November 7, 2017, 3:33 pm at 3:33 pm

    தலைப்பிற்கும் தகவலிற்கும் ஏதும் தொடர்பு உண்டென கருதமுடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.