England

#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு)

#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து.

இங்கிலாந்தில் இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து,இந்திய அணிகளுக்கிடையில் இறுதி போட்டியில் அசத்தல் வெற்றிபெற்ற இங்கிலாந்து வரலாறு படைத்துள்ளது.

போட்டியை நடத்திய நாடும் முன்னாள் உலக சாம்பியன்களுமான இங்கிலாந்து அதன் சொந்த  மண்ணில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியை வெற்றிகொண்டு மீண்டுமொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றும் 4வது உலக கிண்ணம் இதுவாகும்.

லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான முக்கிய இறுதி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடியது.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 7  விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்கள் பெற்றது.

முதலாவது மகளிர் உலக கிண்ணத்தை குறிவைத்து களமாடிய இந்தியாவுக்கு 229 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு அருமையான வாய்ப்புக்கள் இருந்தாலும் இறுதிநேரத்தில் இந்தியா விக்கெட்டுக்களை வேகமாக பறிகொடுத்த நிலையில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து  வெற்றிபெற்றது.

இறுதி 6  விக்கெட்டுக்களை இந்திய மகளிர் அணி வெறுமனே 28 ஓட்டங்களில் இழந்தது.191 வது ஓட்டம் பெறப்பட்ட நிலையில்தான் 4 வது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

இந்திய மகளிர் அணியின் பொறுப்பற்ற ஆட்டம் அவர்களுக்கான உலக கிண்ண கனவை தகர்த்துள்ளது.இங்கிலாந்து அணியின் இறுதிவரைக்குமான போராட்ட குணம் அவர்களுக்கு உலக கிண்ணத்தை பரிசளித்துள்ளது.இரு அணிகளும் பங்கெடுத்த குழுநிலை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டோனி தலைமையில் 2014 ம் ஆண்டு T20 உலக கிண்ணம் ,இஷான் கிஷான் தலைமையில் 2016  இளையோர் உலக கிண்ணம்,விராட் கோஹ்லி தலைமையில் இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி , அதன் தொடர்ச்சியாக மித்தாலி ராஜ் தலைமையிலும் மகளிர் உலக கிண்ண இறுதி போட்டிவரை முன்னேறினாலும் கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாது போயுள்ளது.

கடந்த 3ஆண்டுகளில் 4 ICC உலக கிண்ணங்களை இந்திய கிரிக்கெட் கோட்டைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.