Sri Lanka

சிம்பாப்வே நிர்ணயித்த வலுவான இலக்கை துரத்த போராடும் இலங்கை.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய நாள் முடிவில் நான்கு இலக்குக்கள் கைவசம் உள்ள நிலையில் இலங்கை அணியை விட 262 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த சிம்பாப்வே அணி இன்று ஆட்டத்தை தொடர்ந்தது.

நேற்று 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் நின்ற சிக்கந்தர் ரசா தனது கன்னிச்சதத்தை இன்றைய முதலாவது பந்து பரிமாற்றத்திலேயே பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரசா – வோலர் ஜோடி இணைப்பாட்டமாக 144 ஓட்டங்களைப் பெற்ற போது வோலர் ஆட்டமிழந்தது வெளியேறினார். பின்னர் ரசாவும் ஆட்டமிழந்த பின் ஆட்டத்தை தொடர்ந்த அணித்தலைவர் கிறீமர் – திரிபனோ ஜோடி 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற போது திரிபனோ ஆட்டமிழந்தார்.
இறுதியாக கிரேக் கிறீமர் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 377 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது சிம்பாப்வே அணி.

சிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ராசா 127 ஓட்டங்களையும் மல்கம் வாலர் 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

இலங்கை அணியின் சார்பில் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 6 இலக்குக்களை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களால் முன்னிலை வகித்த சிம்பாப்வே அணி, இலங்கைக்கு 388 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

பதிலளித்து துரத்திவரும் இலங்கை அணி 56 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
வெற்றிக்கு இன்னும் 332 ஓட்டங்கள் தேவை.

நேற்று, முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் முதல் நான்கு இலக்குக்களையும் வெறும் 23 ஓட்டங்களுக்குள் இழந்தது. எனினும் அதன் பின்னர் களமிறங்கிய சிகந்தர் ராசா ஒரு முனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாட வில்லியம்ஸ், பீற்றர் மூர் மற்றும் மல்கம் வாலர் ஆகியோர் மறுமுனையில் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார்கள்.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் களத்தில் ஆட்டமிழக்காமல் சிகந்தர் ரசா மற்றும் மல்கம் வோலர் ஆகியோர் நிற்க சிம்பாப்வே அணி 6 இலக்குகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து இலக்குக்களையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றது. சிம்பாப்வே சார்பாக துடுப்பாட்டத்தில் கிரேக் ஏர்வின் 160 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து இலக்குக்களையும் அசேல குணரட்ன மற்றும் லகிரு குமார தலா இரண்டு இரண்டு இலக்குக்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலளித்த இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் 346 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் சந்திமால் 55 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வே சார்பாக பந்துவீச்சில் அணித்தலைவர் கிரேம் கிறீமர் 5 இலக்குக்களையும் வில்லியம்ஸ் 2 இலக்குக்களையும் சாய்த்தார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.