Tennis

விம்பிள்டன் 2017: முன்னணி வீரர் ரோஜர் பெடரர் சாதனையுடன் சாம்பியன் ஆனார்.

டென்னிஸ் ரசிகர்களின் பெருவிருப்புக்குரிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் ஒன்றான விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் – 7ம் நிலை வீரரான மரின் கிளிக் இடையே நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற முன்னணி வீரர் ரோஜர் பெடரர் இவ் வருடத்தின் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் ஆனார்.

ஐந்து செட்கள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதலாவது செட்டை ரோஜர் பெடரர் 6-3 என்று கைப்பற்றினார்.இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி வீரர் பெடரர், 6-1 என்று இலகுவாக 2வது செட்டையும் கைப்பற்றினார். மூன்றாவது செட்டையும் 6-4 என்று கைப்பற்றிய ரோஜர் பெடரர் 3:0 என்று நேரடி செட்களில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

இது பெடரர் க்கு 8வது விம்பிள்டன் பட்டமாகும். 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012 ஆண்டுகளிலும் பெடரர் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று பெடரர் தனது விம்பிள்டனின் 11வது இறுதி ஆட்டத்தில் ஆடியமையும் குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டனில் முதலாவது வீரராக எட்டு தடவை பட்டம் வென்ற பெடரர், கிராண்ட்ஸ்லாம் பட்டம் அதிக தடவை வென்றவர் என்ற தனது சாதனையை 19 தடவையாக உயர்த்தினார்.

இந்த வருடம், அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் பெடரர் வென்றமை குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெடரர் பங்கெடுக்கவில்லை.

 

G Mugurusa with title. #Wimbledon2017

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கார்பன் முகுருசா பட்டம் வென்றார்.
இதன் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்று இருந்தது.
இது தொட‌ர்பான விபரம் இங்கே.

 

ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்களும் நேற்று நடைபெற்றது.
ஆடவர் பிரிவில் லூகாஸ் குபோட் – மர்செலோ மெலோ ஜோடியும் மகளிர் பிரிவில் மகரோவா – வெஸ்னினா ஜோடியும் விம்பிள்டன் பட்டத்தை தங்கள் பிரிவுகளில் வென்றது.

தற்போது கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நடைபெற்று வருகின்றது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.