Sri Lanka

சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை மண்ணில் கலக்குகிறது சிம்பாப்வே

சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை மண்ணில் கலக்குகிறது சிம்பாப்வே

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் முதல் நான்கு இலக்குக்களையும் வெறும் 23 ஓட்டங்களுக்குள் இழந்தது. எனினும் அதன் பின்னர் களமிறங்கிய சிகந்தர் ராசா ஒரு முனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாட வில்லியம்ஸ், பீற்றர் மூர் மற்றும் மல்கம் வாலர் ஆகியோர் மறுமுனையில் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார்கள். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் சிம்பாப்வே அணி 6 இலக்குகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் சிம்பாப்வே அணி 4 இலக்குக்கள் கைவசம் உள்ள நிலையில் இலங்கை அணியை விட 262 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. சிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிகந்தர் ராசா ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களையும் மல்கம் வாலர் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். இலங்கை அணியின் சார்பில் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 இலக்குக்களை கைப்பற்றி உள்ளார்.

போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து இலக்குக்களையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றது. சிம்பாப்வே சார்பாக துடுப்பாட்டத்தில் கிரேக் ஏர்வின் 160 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து இலக்குக்களையும் அசேல குணரட்ன மற்றும் லகிரு குமார தலா இரண்டு இரண்டு இலக்குக்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலளித்த இலங்கை அணியின் முதலாவது இன்னிங்ஸ் 346 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் சந்திமால் 55 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வே சார்பாக பந்துவீச்சில் அணித்தலைவர் கிரேம் கிறீமர் 5 இலக்குக்களையும் வில்லியம்ஸ் 2 இலக்குக்களையும் சாய்த்தார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.