Sri Lanka

கிறீமரின் சிறப்பான பந்துவீச்சால் சிம்பாப்வே ஆதிக்கம்

கிறீமரின் சிறப்பான பந்துவீச்சால் சிம்பாப்வே ஆதிக்கம்

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 346 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குக்களையும் இழந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளது.

ஏழு இலக்கு நஷ்டத்திற்கு 293 ஓட்டங்கள் என்ற நிலையில் மூன்றாவது நாளை ஆரம்பித்த இலங்கை அணி, நட்சத்திர வீரர் அசேல குணரட்ன மற்றும் ரங்கன ஹேரத்தின் நிதானமான ஆட்டம் மூலம் ஓட்டங்களைச் சேர்த்தது. அதன் பின்னர் 22 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹேரத்தும் 14 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் லக்மாலும் ஆட்டமிழந்தார்கள். இறுதியில் குணரட்னவும் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 346 ஓட்டங்களுக்குள் இலங்கையின் முதலாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க 71 ஓட்டங்களையும், அணித் தலைவர் சந்திமால் 55 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வே சார்பாக பந்துவீச்சில் அணித்தலைவர் கிரேம் கிறீமர் 5 இலக்குக்களையும் வில்லியம்ஸ் 2 இலக்குக்களையும் சாய்த்தார்கள்.

போட்டியின் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து இலக்குக்களையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றது. சிம்பாப்வே சார்பாக துடுப்பாட்டத்தில் கிரேக் ஏர்வின் 160 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் ரங்கன ஹேரத் ஐந்து இலக்குக்களையும் அசேல குணரட்ன மற்றும் லகிரு குமார தலா இரண்டு இரண்டு இலக்குக்களையும் கைப்பற்றினார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.