England

இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட், தென்னாபிரிக்கா ஆதிக்கம்!!!

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட், தென்னாபிரிக்கா ஆதிக்கம்!!!

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் ஆட்டங்களில் ஆடிவருகின்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

முதலாவது இனிங்சுக்காக முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஆரம்பத்தில் தடுமாறினாலும் அம்லாவின் 78 ஓட்டங்களும் டி கொக்கின் 68 ஓட்டங்களும் பிலான்டரின் 54 ஓட்டங்களும் கைகொடுக்க ஓரளவு நேர்த்தியான இலக்கான 335 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மிரட்டிய அண்டர்சன் ஐந்து இலக்குகளை அள்ளினார். புறொட்டுக்கு மூன்று கிடைத்தது. ஸ்ரோக்ஸ் இற்கு இரண்டு கிடைத்தது.

பதிலுக்கு தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சொந்த நாட்டிலேயே தடுமாறியது. வெறுமனே 205 ஓட்டங்களுக்குள் சுருண்டுபோனது. அதிகபட்சமாக கப்டன் ரூட் அதிரடியாக 78 ஓட்டங்களையும் மற்றும் ஜொனி பைர்ஸ்ரோ 45 ஓட்டங்களையும் பெற்றனர். வேறுயாரும் சொல்லும்படியாக செயற்படவில்லை. பந்துவீச்சில் மோரிஸ் மற்றும் மஹாராஸ் தலா மூன்று இலக்குகளை சாய்த்தனர். மோர்க்கல் மற்றும் பிலான்டருக்கு தலா இரண்டு கிடைத்தது.

130 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்கா தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்து ஆடிவருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு இல்க்கினை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆரம்ப வீரர் குன் எட்டு ஓட்டங்களுடன் நடையைக்கட்டினார். குன்னின் இலக்கினை அண்டர்சன் கைப்பற்றினார். ஆடுகளத்தில் எல்கர் 38 ஓட்டங்களுடனும் அம்லா 23 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்பொழுது 2ம் நாள் ஆட்டநேர முடிவில், 205 ஓட்டங்களால் முன்னிலையிலுள்ள தென்னாபிரிக்கா இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா? என்பதனை பொறுத்தே அறிய வேண்டும். போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்……….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.