West Indies

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் குழாம் அறிவிப்பு; இரு புதுமுகங்கள்.

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலாக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி உட்பட மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் விளையாடவுள்ளது. குறித்த தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விபரமே வெளியாகியுள்ளது.

அணி விவரம்:
ஜசன் ஹோல்டர் (capt), கிரேக் பரத்வையிட் (vice-capt), தேவேந்திர பிஸ்சோ, J பிளைக்வூட், ரோஸ்டன் சேஸ், M கம்மின்ஸ், சேன் டோவ்ரிச், S ஹபிரில், சிம்ரன் ஹட்மையர், கைல் கோப், சாய் கோப், அல்சாரி ஜோசேப், கிரன் பவல், ரய்மன் ரைபேர், கேமர் ரோஜ்.

ஜசன் ஹோல்டர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் துடுப்பாட்ட வீரர் கைல் கோப் மற்றும் வேகப்பந்து வீசும் சகல துறை வீரர் ரய்மன் ரைபேர் ஆகிய இரு புதுமுகங்கள் உள்வாங்கப் பட்டுள்ளனர்.
அத்துடன் கேமர் ரோஜ்க்கும் மீண்டும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
ரோஜ் 2016 முதல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தொடர் ஆகஸ்ட் 17ம் திகதி எக்பஸ்ட்சன் (Edgbaston) இல் ஆரம்பமாகிறது. அடுத்தடுத்த போட்டிகள் ஹேடின்ங்லே (Headingley) மற்றும் லோட்ஸ் (Lord’s) மைதானங்களில் இடம்பெறவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.