Australia

மகளிர் உலகக் கிண்ணம்: இந்தியா அரையிறுதிக்கு தகுதி. (ஏனைய போட்டி முடிவுகளும்)

மகளிர் உலகக் கிண்ணம்: இந்தியா அரையிறுதிக்கு தகுதி. ஆஸி, இங்கிலாந்து அணிகளும் வெற்றி.

எட்டு அணிகள் பங்கெடுத்து வருகின்ற மகளிர் உலக கிண்ண போட்டித் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இன்று எட்டு அணிகளும் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடினர்.

இந்திய மகளிர் – நியூஸிலாந்து மகளிர் ஆட்டம் காலிறுதி போட்டி போன்று நடந்தது.
இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை காணப்பட்டது.
ஆகவே கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அரையிறுதியை உறுதிப்படுத்தியுள்ளது.

Mithali Raj

முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி, அணித்தலைவி மித்தாலி ராஜ் யின் சதத்தின் துணையுடன் 50 பரிமாற்றங்களில் 7 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த நியூஸிலாந்து மகளிர் அணி வெறுமனே 79 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் ராஜேஸ்வரி 5 விக்கெட்களை சாய்த்தார்.
முடிவில் இந்திய மகளிர் அணி, 186 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

 

மற்றைய போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னமே தகுதி பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் ஆஸி மகளிர் வெற்றி பெற்றனர்.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் சகல விக்கெட்களையும் இழந்து 269 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு ஆடிய தென்னாபிரிக்க மகளிர், சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.
முடிவில் அவுஸ்திரேலிய மகளிர் 59 ஓட்டங்களால் வென்றது.
தென்னாப்பிரிக்க மகளிரும் முன்னரே அரையிறுதியை உறுதிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலாந்து மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 

அரையிறுதிக்கு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.

முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளும் இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளிர் அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து ஆடவுள்ளனர்.

குறித்த தொடரில் தங்கள் முதலாவது வெற்றிக்காக காத்திருந்த இலங்கை – பாகிஸ்தான் மகளிர் அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.