உள்ளுர் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் தொடரில் கிழக்கின் மைந்தன் அசத்தல்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நடாத்தும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான
மாகாண மட்ட கிரிக்கெட் தொடர் ஒன்பது மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

கிழக்கு மாகாண அணிக்கும் மேல் மாகாண தெற்கு அணிக்குமிடையிலான இரண்டு நாள் போட்டி நேற்று பொலிஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியது. கிழக்கு மாகாண அணி சார்பாக விளையாடி வரும் மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய கல்லூரி மாணவன் கே.தனுசாந் 82 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 இலக்குக்களை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேல் மாகாண தெற்கு அணி 71.3 பந்துப் பரிமாற்றங்களில் 254 ஓட்டங்களுக்குள் சகல இலக்குக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக மதுஸங்க 53 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கிழக்கின் மைந்தன் கே.தனுசாந் 82 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 இலக்குக்களை சாய்த்தார்.

பதிலளித்து துடுப்பெடுத்தாடி வரும் கிழக்கு மாகாண அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 28 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் எட்டு இலக்கு நஷ்டத்திற்கு 78 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.