India

இறுதிப்போட்டி சூதாட்ட குற்றச்சாட்டு – ரணதுங்கக்கு இந்திய வீரர்கள் பதிலடி.

2011 உலக கிண்ண இறுதிப்போட்டியில் சூதாட்டம் – ரணதுங்க
இந்திய வீரர்கள் தக்க பதிலடி

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சங்ககாரா தலைமையிலான இலங்கை அணியை வீழ்த்தி, டோனி தலைமையிலான அணி 28 ஆண்டுகளுக்கு பின்னர் உலக கிண்ணத்தை வெற்றிகொண்டு வரலாறு படைத்தது.

இந்த போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதாக 6 ஆண்டுகள் கழித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுனா ரணதுங்க தனது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதற்கு இந்திய ஊடகங்களும், இந்திய வீரர்கள் பலரும் தமது காட்டமான கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மிகத்திறமையாக விளையாடிய கம்பீர்,”ரணுதுங்கா போன்ற கிரிக்கெட்டில் முக்கியமான ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வருவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நேஹ்ரா, “இதை நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மதிப்புக் கொடுத்து கருத்து கூறவும் நான் விரும்பவில்லை. இதேபோல 1996 ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணம் வென்றது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் சரியாக இருக்குமா?” என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.