Sri Lanka

சந்திமாலிற்காக இலங்கையின் வெற்றியை தாமதப்படுத்திய மத்தியூஸ் – காணொளி இணைப்பு

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தலைமைப் பதவியினை அஞ்சேலோ மத்யுஸ் துறக்க, புதிய டெஸ்ட் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பெரிதாக சந்திமால் அண்மைய காலங்களில் சோபிக்கத் தவறியிருந்தாலும், மறக்கமுடியாத சில சாதனைகளை செய்துள்ளார் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயமாகும்.

சரியாக இதே மாதத்தில் ஆறு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, நெட்வெஸ்ட் ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தது.

அந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்திமால் சத்ததினைப் பெற்று சாதனை படைத்திருந்தார். லோர்ட்ஸ் மைதானத்தில் சதம் பெறுவது என்பது கிரிக்கெட் வீரன் ஒருவனின் அதியுச்ச கனவாக இருக்கும். அந்தக் கனவினை நினைவாக்கிய ஒருவராக சந்திமால் அன்றைய தினம் மாறியிருந்தார்.

126 பந்துகளினைச் சந்தித்த சந்திமால், 1௦5 ஓட்டங்களை ஆட்டமிழக்காது  பெற்று இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றி முதலே பெறப்பட வேண்டியதொன்றாகும். இருந்தும் சந்திமால் சதத்தினைப் பெறவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மத்தியூஸ் 21 பந்துகளைச் சந்தித்து வெறுமனே ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்றிருந்தார்.

விளையாடிக் கொண்டிருக்கும் போதே, மத்தியூஸின் இந்தச் செய்கையைக் கண்ட அப்போதைய இலங்கை அணியின் தலைவர் டில்ஷான் மற்றும் லசித் மலிங்க தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

இருந்தும் எதனையும் பொருட்படுத்தாது, சந்திமாலின் சதத்தினைக் கடக்க மத்யூஸ் உதவியிருந்தார் என்பது யாரும் மறுக்கவும் மறக்கவும் முடியாத உண்மையாகும். அதன் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் இலங்கை அணியின் புதிய டெஸ்ட் தலைவர் சந்திமாலிற்கு, எப்பொழுதும் மத்தியூஸ் உதவியாக இருப்பர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.