Sri Lanka

தீர்மானம் மிக்க இந்தியத் தொடர்- உலகக் கிண்ண நுழைவுக்குப் போராடவுள்ள இலங்கைஅணி…!!!

தீர்மானம் மிக்க இந்தியத் தொடர்-
உலகக் கிண்ண நுழைவுக்குப் போராடவுள்ள இலங்கைஅணி…!!!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகளில் 10 அணிகள் பங்குபற்ற உள்ளன. அவற்றில் ஏழு அணிகள் தரவரிசையின் அடிப்படையிலும், போட்டியை நடத்தும் இங்கிலாந்துமாக மொத்தமாக எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெறவுள்ளன.

போட்டியை நடத்தும் நாடாக இங்கிலாந்து நேரடியாக தகுதி பெற்று விட்டது. 2017 செப்டம்பர் 30 அன்று இங்கிலாந்து தவிர தரவரிசையில் முதல் ஏழு இடத்திலும் உள்ள அணிகளும் உலக கிண்ணப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும்.

தற்போது இங்கிலாந்தை விட தரவரிசையில் முதல் ஆறு இடத்திலுமுள்ள தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் நேரடியான தகுதியை உறுதிப்படுத்தியுள்ளன.

சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி தற்போது 88 புள்ளிகளுடன்
தரவரிசையில் எட்டாமிடத்தில் உள்ளது.
அதேவேளை இந்திய அணியுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் 78 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை அணி இந்தியாவை எதிர்த்தாடும் அதேவேளை, செப்ரம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை எதிர்த்தாடவுள்ளது. இந்த இரு தொடர்களும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களாக அமையவுள்ளன.

இந்நிலையில் இலங்கை அணி, இந்திய அணிக்கெதிராக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளை வெல்லுமிடத்து மேற்கிந்திய-இங்கிலாந்து தொடரில் என்ன நடந்தாலும், இலங்கை அணியே நேரடியாக தகுதி பெறும்.

இலங்கை அணி, இந்திய அணிக் கெதிராக ஒரு போட்டியில் மட்டும் வெல்வதோடு, மேற்கிந்திய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெல்லுமாயின், மேற்கிந்திய தீவுகள் அணி நேரடியாக தகுதி பெறும்.
ஒரு போட்டியில் கூட மேற்கிந்திய தீவுகள் தோல்வியுற்றாலொ/ மழை குறுக்கிட்டு போட்டி கை விடப்பட்டாலோ, இலங்கை அணியே நேரடியாக தகுதி பெறும்.

இலங்கை அணி இந்திய அணியிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைவதோடு மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெற்றி பெற்றால், மேற்கிந்திய தீவுகள் நேரடித் தகுதியைப் பெறும்.
எனினும் மேற்கிந்திய அணி ஒரு போட்டியில் கூட இங்கிலாந்திடம் தோல்வியடைந்தாலும், இலங்கை அணியே நேரடியாக தகுதி பெறும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.