Sri Lanka

தலைமைப் பதவியை ராஜினாமா செய்தார் அஞ்சலோ மத்தியூஸ்

இலங்கை அணியின் தலமைப் பதவியை ராஜினாமா செய்தார் அஞ்சலோ மத்தியூஸ்.

சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மத்தியூஸ் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் மத்தியூஸின் தலமையில் விளையாடிய இலங்கை அணி 13 வெற்றிகளையும் 15 தோல்விகளையும் அடைந்துள்ளது. அதேவேளை மத்தியூஸின் தலமையில் 98 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 47 போட்டிகளில் வெற்றியையும் 45 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மேலும் 12 இருபதுக்கு இருபது போட்டிகளில் மத்தியூஸின் தலைமையில் விளையாடிய இலங்கை அணி 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

மத்தியூஸின் விலகலை அடுத்து தலைமைப் பதவிக்கு உபுல் தரங்க , நிரேஷன் டிக்வெல்ல ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.