Sri Lanka

மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் வீரர்கள் – விபரம் உள்ளே.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பில் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான
மாகாண மட்ட கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்பேசும் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.

நாளைய தினத்தில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்ட ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 மைதானக்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

10 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.இலங்கையின் 19 வயதுக்குட்ப்பட்ட உலக கிண்ண அணியில் விளையாடும் வீரர்களும், சர்வதேச அறிமுகம் மேற்கொண்ட ஒருசில வீரர்களும், எதிர்கால இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவுள்ள பல திறமையான இளம் வீரர்களும் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளமை முக்கிய விடயமாகும்.

வடமாகாண அணியில் டார்வின், ராஜு கஜானாத், அஞ்சயன், ராஜீவின், கனகரத்தினம் கபில்ராஜ், ரதீசன், யதுஷன் ஆகிய வீரர்களும், கிழக்கு மாகாண அணியில் ஆர்.தேனுதரன், எம்.சாருகன், கே. தனுஷாந்த், ரபாஸ் ஆகிய தமிழ்பேசும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய மாகாண அணியில் மொதமேது அல்பர், சனோகித் சண்முகநாதன் ,மொஹமட் சிராஸ் ஆகிய வீரர்களும், ஊவா மாகாண அணியில் மொஹமட் சமாய், எஸ். கோபிநாத் ஆகிய தமிழ்பேசும் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

குறித்த போட்டிகளில் மிக திறமையாக விளையாடி இலங்கையின் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாட விளையாடு.com அன்போடு வாழ்த்துகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.