கிரிக்கெட் செய்திகள்

புதிய ஒருநாள் போட்டி தரவரிசை வெளியானது ..!

புதிய ஒருநாள் போட்டி தரவரிசை வெளியானது ..!

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்,மற்றும் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து புதிய ஒருநாள் போட்டி தரநிலை வெளியாகியுள்ளது.

2019 உலக கிண்ண போட்டிகளுக்கு நேரடித் தகுதிக்கு போட்டிபோடும் நிலையில் இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இரு தொடர்களும் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்குமான புள்ளி வித்தியாசம் 15 ஆக காணப்பட்ட்து, ஆயினும் இலங்கையின் சிம்பாவேயுடனான ஒருநாள் தொடர் தோல்வி அந்த வித்தியாசத்தை 10 ஆக குறைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் முதல் 3 இடங்களிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8 வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 78 புள்ளிகளுடன் 9 வது இடத்தையும் பிடித்துள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.