India

இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் அறிவிக்கப்பட்டார்…!

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற விபரம் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற விபரம் நேற்று அறிவிக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டாலும், நேற்று அறிவிக்க முடியாதுள்ளதாக சவ்ரவ் கங்குலி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று, ANI செய்தி நிறுவனம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் குழுவில்
இடம்பெற்றிருந்த முன்னாள் தலைவர்களான சவ்ரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் VVS லக்ஷ்மன் ஆகிய மூவரடங்கிய குழுவினர் நேர்முகத் தேர்வுகளுக்குப் பின்னர் நேற்று புதிய பயிற்சியாளரை அறிவிப்பார்கள் என்று நம்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ராஜ்புட், ரவி சாஸ்திரி, விரேந்தர் சேவாக், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் டோம் மூடி ஆகியோரது நேர்காணல் நேற்று நடைபெற்றாலும்,
அணித்தலைவர் உள்பட சிலபேரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. உடனடியாக பயிற்சியாளர் பெயரை அறிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார்.

தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட அணில் கும்ப்ளேயின் பதவி விலகலுக்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, புதியவரை நியமிக்கும் நோக்கில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட்து.

 

ரவி சாஸ்திரி, டொம் மூடி, விரேந்தர் சேவாக் ஆகியோருக்கிடையிலான பலத்த போட்டிக்கு மத்தியில் ரவி சாஸ்திரி இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கும்ப்ளேயின் பயிற்சியாளர் பதவி நியமனத்துக்கு முன்னர் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்தியவர் ரவி சாஸ்த்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.