Australia

கிளென் டொனால்ட் மெக்ராத் – வாரம் ஒரு பிரபலம்

உலகக் கிரிக்கெட்டையே அவுஸ்திரேலிய அணி தனது கைக்குள் அடக்கி வைத்திருந்த காலம் அது, அக்காலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு வரமாய் கிடைத்தவர் தான் இந்த மெக்ராத்.

இந்திய அவுஸ்திரேலிய போட்டிகளில் மெக்ராத் ஆடிய காலத்தில் அப்போட்டி சச்சினுக்கும் மெக்ராத்துக்குமான போட்டியாகவே காணப்பட்டது. பல வீரர்களை கதிகலங்க வைத்த ஒரு வேகம் என்றே மெக்ராத்தை சொல்லலாம். மெக்ராத்தின் லைன் மற்றும் லெந் துடுப்பாட்ட வீரர்களுக்கு கொடுத்த நெருக்கடி ஏராளம் என்றே சொல்லலாம்.

அப்பிடிப்பட்ட இவர் 1970/02/09 அன்று அவுஸ்திரேலியாவில் பிறந்தார். இவரின் பந்து வீசும் முறை வலது கை வேகப்பந்துவீச்சாகும். தனது 23 ஆவது வயதில் 1993/11/12 அன்று நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் 563 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இவரின் டெஸ்ட் பந்து வீச்சு சராசரி 21.64 ஆகும். இவர் டெஸ்ட் போட்டிகளில ஓவருக்கு 2.5 எனும் வீதத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார். இவர் 29 தடவைகள் ஐந்து விக்கெட்டுக்களையும் மூன்று தடவைகள் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இவருடைய 563 விக்கெட்டுக்கு இரண்டு சாதனைகள் உண்டு. ஒன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்திய அதி கூடிய விக்கெட்டுகளாகும். இரண்டாவது மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முரளிதரன், வோன், கும்பிளே க்கு அடுத்த இடத்தில் இவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது இவர் துடுப்பாட்டத்தில் ஒரு அரைச்சதமும் கடந்துள்ளார்(61). 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆஷஸ் போட்டியில் மார்கஸ் ரெஸ்கோதிக் இன் விக்கெட்டை கைப்பற்றி தனது 500 ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார். அந்த போட்டியிலே மெக்ராத் இரண்டாவது இனிங்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்று அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இவ்வாறு சிறப்பாக ஆடிய இவர் 2007/01/02 அன்று இங்கிலாந்துக்கு எதிராக தனது இறுதி டெஸ்டை ஆடினார்.

1993/12/09 அன்று தென்னாபிரிக்காவிற்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியை ஆடிய இவர் இதுவரை 250 போட்டிகளில் ஆடி 381 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இது ஏழாவது அதி கூடிய ஒருநாள் போட்டிகளின் விக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆகும். உலக கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை இன்னும் இவரிடமே உள்ளது. இவரின் பந்துவீச்சின் சராசரி 22.02 ஆகும். ஓவருக்கு 3.88 எனும் வீதத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருக்கிறார். இவர் ஏழு தடவைகள் ஐந்து விக்கெடடுகளை வீழ்த்தியுள்ளார். 2007/04/28 அன்று இலங்கைக்கு எதிராக தனது இறுதி ஒருநாள் போட்டியில் ஆடியமை குறிப்பிடத்க்கது.

இதுவரை இரண்டு இருபது இருபது போட்டிகளில் ஆடிய இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓவருக்கு 9.88 எனும் வீதத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

கிளென் மெக்ராத், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் தனது இறுதிப் பந்தில் விக்கெட்டை சாய்த்துள்ளமை சிறப்பம்சமாகும்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக டெல்லி அணியால் 1.4 கோடிக்கு வாங்கப்பட்டார். இதுவரை 14 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய இவர் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இப்போட்டிகளில் இவர் 6.61 எனும் வீதத்தில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

இவர் ஐசிசி உலக கிண்ண பதினொருவர் அணியிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்க்கது.

புற்றுநோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு “மெக்ராத் பவுண்டேஷன்” மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவுஸ்திரேலியவின் சிட்னியில் நடைபெறுகின்ற ஒரு டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் போட்டி என்று நடைபெற்று வருகின்றமைக்கு மெக்ராத் பவுன்டேஷனே காரணம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் போட்டியாகவே நடைபெறுகிறது.

சிறிக்குமார் சாந்தகுமார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.