India

“கேப்டன் கூல்” – மகேந்திர சிங் டோனி (பிறந்தநாள் சிறப்பு பகிர்வு)

இந்தியக்கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றி எழுதிய, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய “கேப்டன் கூல்” மகேந்திர சி்ங் டோனியின் வரலாற்றையும் அவரது கிரிக்கெட் சாதனைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்பவுள்ளது.

1981 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஏழாம் திகதி ராஞ்சியிலே பிறந்த இவர் 2005/12/02 அன்று இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளிலும் 2004/12/23 அன்று பங்களாதேஷ் இற்கு எதிராக ஒருநாள் போட்டிகளிலும் 2006/12/01 அன்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இருபது இருபது போட்டிகளிலும் அறிமுகமானார்.

இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4876 ஓட்டங்களை 38.09 எனும் சராசரியில் பெற்றுள்ளார். அதிகபட்ச ஓட்டம் 224 ஆகும். இதில் 6 சதங்களும் 33 அரைச்சதங்களும் ஒரு இரட்டைசதமும் அடங்கும். இதில் 544 நான்கு ஓட்டங்களும் 78 ஆறு ஓட்டங்களும் அடங்கும். பத்து தடவைகள் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார். 16 தடவைகள் ஆட்டமிழக்காது களத்தில் இருந்துள்ளார்.

இதுவரை 296 ஒருநாள் போட்டிகளில் ஆடிய டோனி 9496 ஓட்டங்களை 51.33 எனும் சராசரியில் பெற்றுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 183 ஆகும். இதில் பத்து சதங்களும் 64 அரைச்சதங்களும் அடங்கும். இங்கு 731 நான்கு ஓட்டங்களும் 208 ஆறு ஓட்டங்களும் அடங்கும். எட்டு தடவைகள் ஓட்டம் எதும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார். எழுபது தடவைகள் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்திருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

இதுவரை 76 இருபது இருபது போட்டிகளில் ஆடி 1209 ஓட்டங்களை 36.64 எனும் சராசரயில் பெறாறுள்ளார். அதிகபட்சம் 56 ஆகும். இதில் ஒரு அரைச்சதம் அடங்கும். ஒருதடவை ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார். 33 தடவைகள் ஆட்டமிழக்கவில்லை. இங்கு 83 நான்கு ஓட்டங்களும் 36 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.

இதுமட்டுமல்லாது 159 ஐபிஎல் ஆட்டங்களில் 3561 ஓட்டங்களை 37.88 எனும் சராசரியில் எடுத்துள்ளார். இங்கு பதினேழு அரைச்சதங்கள் அடங்கும். அதிகபட்சம் 70 ஆகும். இங்கு முறையே 251,156 நான்கு மற்றும் ஆறு ஓட்டங்களும் அடங்கும். மூன்றுமுறை ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்மிழந்துள்ளார். 49 தடவைகள் ஆட்டமிழக்கவில்லை.

இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014/12/28 வரையும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்காக செப்டெம்பர் 2007 இல் இருந்து 2017/01/04 வரையும் அணித்தலைவராக செயற்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது இவர் மத்தியவரிசை அதிரடி துடுப்பாட்ட வீரரும் மற்றும் அணியின் சிறந்த விக்கெட் காப்பாளரும் ஆவார்.

டோனியின் தலைமைத்துவத்துக்கு கீழ் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு இருபது இருபது உலக கிண்ணத்தையும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உலக கிண்ணத்தையும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் கிண்ணத்தையும் கைப்பற்றியது. ஐசிசி இனுடைய சகல கிண்ணங்களையும் வென்ற முதலாவது கப்டனாக டோனி தன்னை முடி சூடிக்கொண்டார். 2011 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் 91 (79) ஓட்டங்களைப் பெற்று மீண்டும் தன்னை “Best Finisher” ஆக அடையாளப்படுத்திக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

“ICC Player of the Year” விருதினை 2008 & 2009 ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்டதோடு இரண்டு தடவைகள் இவ் விருதினை வென்ற முதலாவது வீரராகவும் மாறினார். அதுமட்டுமல்லாது 2009 ஆம் ஆண்டு “ICC World Test XI” & “ICC World ODI XI” ஆகிய அணிகளுக்கு கப்டனாக தெரிவானார். டெஸ்ட் போட்டிகளில் இரு தடவையும் 21 தடவைகள் ஒருநாள் போட்டிகளிலும் உலக கிண்ணத்தில் ஒரு முறையும் ஐபிஎல் இல் 13 தடவைகளும் ஆட்டநாயகனாக தெரிவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக 183 ஓட்டங்களை பெற்றமையே இவரது அதிகபட்சமாகும். அத்தோடு விக்கெட் காப்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டமும் இதுவே ஆகும். இதற்கு முதல் இச்சாதனை கில் கிறிஸ்ட் இடம் இருந்தமை யாவரும் அறிந்ததே. அதிக ஆட்டமிழப்புக்களை செய்த இந்தியன் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையும் இவரிடமே உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக 2012 இல் சென்னையில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் ஏழாம் இடத்தில் வந்த டோனி சதம் கடந்து அசத்தினார். இந்த போட்டியில் டோனி ஒரு சாதனை செய்திருந்தார் அதாவது ஏழாம் நிலையில் வந்து துடுப்பெடுத்தாடி சதம் கடந்த முதலாவது கப்டன் என்பதே அதுவாகும்.

 

2013 இல் இடம்பெற்ற போடர் கவாஸ்கர் போட்டித்தொடரில் டோனி இரட்டைசதம் கடந்ததோடு இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ஒருவர் பெற்ற முதலாவது இரட்டைசதம் அதுவாகும். அதுமட்டுமல்லாது முதலவாது விக்கெட் காப்பாளர் டெஸ்ட் போட்டி ஒன்றில் 4000 ஓட்டங்களை கடந்த சாதனையும் இவரையே சாரும்.

இவரது தலைமைத்துவத்துக்கு கீழ் இந்திய அணி முதலாவது அணியாக 40 வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தியாவின் கப்டன் ஒருவர் வேகமாக ஒருநாள் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த சாதனையும் இவரிடமே உள்ளது. அதுமட்டுமல்லாது முதலாவது இந்தியன் கப்டனாகவும் எல்லாமாக சேர்த்து மூன்றாவது வீரராகவும் 100 ஒருநாள் வெற்றியை பதிவு செய்து சாதனை நிலைநாடடியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சாதனைகளுடன் கிரிக்கெட் உலகில் வலம் வரும் வரலாறுகள் பேசிடும் ஒரு மனிதனாக திகழ்ந்து வரும் டோனியின் பிறந்ததினம் இன்றாகும்.

 

விளையாட்டு.கொம் சார்பில்,
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்டன் கூல்”
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல”
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேந்திர சிங் டோனி”

Happy Birthday MS Dhoni 🎂🎂🎂
Lots of Love ❤❤❤

 

சி.சாந்தகுமார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.