Home

பந்து வீச்சுப் பலத்தால் மேற்கிந்திய தீவுகளை வென்றது இந்தியா…!

பந்து வீச்சுப் பலத்தால் மேற்கிந்திய தீவுகளை வென்றது இந்தியா…!

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

மிக குறைவான ஓட்ட எண்ணிக்கியையே இந்தியா பெற்றிருந்தாலும் , அந்த போட்டியில் அவர்கள் தமது பந்துவீச்சுப் பலத்தை காண்பித்து வெற்றியை பெற்றுள்ளார்கள்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இந்திய  அணிக்கு ஆரம்பம் மிக நல்ல நிலையில் இல்லாவிட்டாலும் டோனி, கேதார் யாதவ் ஆகியோரின் அதிரடியில்  இறுதி பத்து ஓவர்களில் 101 ஓட்டங்கள் பெற்றது.

ரஹானே 72,தவான் 02, கோஹ்லி 11 , யுவராஜ் சிங் 39,டோனி 78* ,கேதார்  யாதவ்  40*ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க, இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு  251 ஓட்டங்கள் பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்கு 252 ஓட்டங்கள்  நிர்ணயிக்கப்பட்டது.ஆயினும் அந்த அணி 38.1 ஓவர்கள் நிறைவில் 158 ஒட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

அண்மைய நாட்களாக ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சில் சொதப்பிவரும் அஸ்வின் 10  ஓவர்களில் 28 ஒட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார், இளம் வீரர் குல்தீப் யாதவ் 41 ஒட்டங்களை விட்டுக் கொடுத்து 3  விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஆட்ட நாயகன் விருதை டோனி தனதாக்கினார்.

தொடரின் முதல் போட்டி போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் மழை காரணமாக கழுவப்பட்டு, 2  வது போட்டியில் இந்தியா 105  ஓட்டங்களால் வெற்றியை பெற்றநிலையில்  5  போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0  என்று முன்னிலை பெற்றுள்ளது.

1 Comment

1 Comment

  1. Arun

    July 2, 2017, 8:15 am at 8:15 am

    அது என்ன கடைசி பந்தியில.. ” கழுவுதல் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.