#ICC Champions Trophy

இலங்கையை விட்டு வெளியேறினார் கிரிக்கெட் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட்.? சிக்கல் தொடர்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு என்ன நடந்தது ? சிக்கல் தொடர்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படும் தென் ஆப்பிரிக்காவின் கிரஹாம் போர்ட்டுக்கு என்னவானது என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

2019  உலக கிண்ண போட்டிகள் வரை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட போர்ட்,இப்போது இலங்கையிலோ அல்லது இலங்கை அணியுடனோ இல்லை என்பதுதான் சிக்கல் நிலைமைக்கான காரணமாகும்.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்களால் வீரர்களுக்கிடையிலும் கிரிக்கெட் நிர்வாகிகளுக்கிடையிலும் முறுகல் நிலைமை தொடர்கையில்,இந்த சேதியும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அணி முகாமையாளர் அசங்க குருசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே போர்டின் வெளிநடப்புக்கு காரணம் என்று விளையாட்டு.com க்கு அறியக் கிடைக்கிறது.

சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இந்திய அணியுடனான போட்டிக்கு முன்னதாக குறித்த சிக்கல்நிலை தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு போர்ட் தெளிவு படுத்தியுள்ளார்.

ஆயினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயல்பாடுகளின் அடிப்படையில் குருசிங்கவின் நியமனத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றும் , உங்களது ஒப்பந்த காலம் 2019 உலக கிண்ணம் வரை இருப்பதால் அதற்கேற்ற விதத்தில் நடந்துகொள்ளுமாறும் போர்ட் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

ஆயினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கருத்துக்களில் உடன்படாத அவர் லண்டனிலிருந்து நேரடியாக தனது தாயகமான தென் ஆப்பிரிக்காவை  அடைந்துள்ளார்  .

ஜிம்பாப்வே அணியுடனான தொடருக்குரிய ஆயத்தங்களில் ஈடுபடும் இலங்கை அணிக்கு பயிற்சியாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

களத்தடுப்பு பயிற்சியாளராக செயல்படும் நிக் போதாஸ் , அணியை கவனித்துக் கொள்வதாகவும் கிரஹாம் போர்ட் இதுவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உத்தியோகபூர்வமாக பதவிவிலகலை  அறிவிக்கவில்லை என்றும் அறியப்படுகின்றது.

ஆயினும், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதும் கவலைக்குரியதே.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.