#ICC Champions Trophy

விராட் கோஹ்லிக்கு என்னை பிடிக்கவில்லை- கும்ப்ளே

விராட் கோஹ்லிக்கு என்னை பிடிக்கவில்லை- கும்ப்ளே (பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார்)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு என்னை பிடிக்கவில்லை, இதன் காரணத்தாலேயே பதவி விலகல் முடிவுக்கு வந்ததாக அணில் கும்ப்ளே அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகலுக்கான காரணத்தை ,இந்திய கிரிக்கெட் சபைக்கு அறிவித்த செய்த குறிப்பில் கும்ப்ளே இதனை தெரிவித்துள்ளார்.

எனது ஸ்டைல் அணித்தலைவர் கோஹ்லிக்கு  பிடிக்கவில்லை என்றும், நான் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் சார்பில் முதல் முறையாக சாம்பியன்ஸ் போட்டிக்கு பின்னதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு அணியின் தலைவருக்கும்,பயிற்சியாளருக்கும் உள்ள எல்லை வரையறை குறித்து நான் எப்போதும் மதிப்பவன் என்பதால் அதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன் எனவும் கும்ப்ளே தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

அணியின் தலைவருக்கும் எனக்கும் இடையிலான குழப்பத்தைத் தீர்த்து வைக்க இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகம் முயற்சி செய்தாலும் அதனை நான் விரும்பவில்லை.

அதனால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிச் செல்வதே நல்லது என நான் நம்புகிறேன் எனவும் கும்ப்ளே தனது பதவி விலகல் கடிதத்தில் கும்ப்ளே  அறிவித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் பயணப்பட்டிருக்கும் இந்திய அணியை உதவி பயிற்சியாளர் பாங்கார் கவனித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளார், அநேகமாக இலங்கை அணியுடனான தொடருக்கு புதிய பயிற்சியாளராக சேவாக் அல்லது டோம் மூடி நியமிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.