#ICC Champions Trophy

சாம்பியன்ஸ் கிண்ண அணித்தேர்வில் அஸ்வினை புறக்கணித்தாரா கோஹ்லி…?

சாம்பியன்ஸ் கிண்ண அணித்தேர்வில் அஸ்வினை புறக்கணித்தாரா கோஹ்லி…?

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் போது, அந்த அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்ய கோஹ்லி விரும்பவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் மிக திறமையான வீரராக செயல்படும் அஸ்வின் ,ஒருநாள் போட்டிகளில் அண்மைய நாட்களாக பேசும்படியாக திறமையை வெளிப்படுத்த தவறி வருகின்றார்.

இந்தநிலையில் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அணியிற் தேர்வு செய்யும் சந்தர்ப்பத்தில் , அஸ்வினுக்கு பதிலாக இருவர் பெயரை கோஹ்லி பரிந்துரைத்துள்ளனர்.

IPL போட்டிகளில் அவர் தலைமையில் விளையாடும் ஜூஸ்வேந்திர சஹால் மற்றும் டெல்லி IPL அணியில் விளையாடியவரும், ராஞ்சி கிண்ண போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றியவருமான சப்ராஸ் நதீம் ஆகியோரை சேர்க்குமாறு கோஹ்லி கேட்டுள்ளார்.

தேர்வாளர்கள் ஜூஸ்வேந்திர சஹாலை அணிக்குள் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும், பின்னர் அனுபவத்தின் அடிப்படையில் அஸ்வினை தவிர்க்க முடியாது போனதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் அஸ்வின் மிகப்பெரியளவில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.