#ICC Champions Trophy

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி பற்றிய பார்வை – சமூக வலைத்தளங்களிலிருந்து….

நேற்றைய இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளின் தயார்படுத்தல்களும் அணிக்கட்டமைப்பும் அணி நிலைமைகளும் எவ்வாறு இறுதி முடிவுகளில் தாக்கம் செலுத்தியது என்ற ஒரு அலசல். நீண்ட நேரம் நானும் நண்பர்Branatheesh உம் கலந்துரையாடிய பின்னர் பெறப்பட்ட விடயங்களின் சுருக்கம்.

இந்திய அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தது சரியான முடிவாக இருந்த போதும் களத்தடுப்பு மிக மோசமானதாக அமைந்திருந்தது. குறிப்பாக 25 ஓட்டங்கள் உதிரிகள் அதே போன்று முக்கியமான ஆரம்ப விக்கட் ஃபகர் ஸமான் 2 ஓட்டங்களை பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டும் முறையற்ற பந்து வீச்சால் பெறப்பட்ட life line ஐ மிகச்சிறப்பாக பயன்படுத்தியதால் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் பாகிஸ்தானை மட்டுப்படுத்த முடியாமல் போனது, பின்னர் கடைசியில்
ஹஃபீசும் இமாட் வசீமும் வெளுத்து வாங்கியிருந்தார்கள்.

போட்டியில் களமிறங்கும் போதே பாகிஸ்தான் அணியின் confidence level மிக உயர்வாக காணப்பட்டது 338 என்ற ஓட்ட இலக்கைப்பெற்ற பின்னர் அது இன்னும் பல மடங்கு உயர்ந்து காணப்பட்டமையானது அவர்களின் பந்து வீச்சு துல்லியமாக அமைவதற்கு மூலகாரணமாகும். அதே போன்று அவரகளின் களத்தடுப்பும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் ஸ்திரமற்ற நிலையிலேயே உள்ளது என்பது இப்போட்டியில் அப்பட்டமாக பிரதிபலித்தது. அத்துடன் அண்மைக்காலமாக இந்திய அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்டம் பலவீனமாகவே உள்ளது. ஆரம்ப நிலை துடுப்பாட்ட வீர்ர்களான ரோஹித் சர்மா, தவான், கோலி தவிர மற்ற இடைநிலைத்துடுப்பாட்ட வீரர்களான யுவராஜ் சிங், தோணி, கேதார் ஜாதவ், ஜடேஜா போன்றோர் அண்மைக்காலமாக அவளவு சிறப்பான பெறுபேறுகளை தொடர்ச்சியாக காட்டிவரவில்லை என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம்.

அடுத்தடுத்து ஆரம்ப விக்கட்டுகள் பறிபோன நிலையில் இந்தியாவிற்கு தேவைப்பட்டது ஒரு நீண்ட இணைப்பாட்டம் மட்டுமே, பாண்டியாவின் அதிரடி இறுதி நம்பிக்கையை தந்திருந்தது குறிப்பாக சுழற்பந்தை அவளவு அழகாக சிக்சர்களுக்கு மாற்றியிருந்தார் இன்னுமோர் 15 ஓவர்களுக்கு ஹார்திக் பாண்டியா-ஜடேஜா இணைப்பாட்டம் நீடித்திருக்கும் பட்சத்தில் இந்திய அணி போட்டியை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்க முடியும் ஆனாலும் தேவையற்ற ஒரு ஓட்டத்தை பெற முற்பட்ட ஜடேஜாவால் துரதிர்ஷ்டவசமாக அதுவும் முடியாமல் போனது.
ஆக மொத்தத்தில் ஆரம்பம் முதல் போட்டியில்
பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்திவந்தது 16-26 ஓவர்களுக்கிடைப்பட்ட பகுதியைத் தவிர இது ஒரு ஒட்டு மொத்த பாகிஸ்தான் அணியின் போட்டி. இளம் பாகிஸ்தான் அணி புதிய தலைவரான சர்ப்ராஸ் அஹமட்டின் கீழ் இம்ரான் கான் காலத்தில் இருந்த ஒரு அணியைப்போல் புத்துணர்ச்சி பெற்ற அணியாக தென்படுகிறது. ஆமிர், ஹசன் அலி ஆகியோர் வசிம் அக்ரம் வக்கார் யூனுஸ் ஸ்விங் கொம்போவாக தென்படுகிறார்கள். துடுப்பாட்டத்தில் ஃபகர் ஸமன் கன்சிஸ்டன்ட் ஆக ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் அணியின் coordination நீண்ட காலத்தின் பின் திரும்ப கிடைத்துள்ளதைப்போன்ற ஓர் உணர்வு. கிரிக்கெட்டுக்கு இது ஆரோக்கியமான ஒரு விடயம். Champions Trophy 2017 பாகிஸ்தான் அணியால் முழுவதுமாக உரித்தாக்கப்பட்ட வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ஒரு மகத்தான வெற்றி இது. Cheers

#CT2017_England_and_Wales

#சஜீவன்_திருமாறன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.