#ICC Champions Trophy

ICC ஒருநாள் தொடர்களில் மந்தமான ஆயிரம் – 4 இலங்கை நட்ஷத்திரங்கள்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் தொடர்களில் மந்தமான ஆயிரம் – 4 இலங்கை நட்ஷத்திரங்கள்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் ஒருநாள் தொடர்களில் (உலகக்கிண்ணம்+சாம்பியன்ஸ் கிண்ணம் ) அடங்கலாக வேகமாக 1000 ஓட்டங்களை சச்சின் 18 இன்னிங்ஸ்களில் பூர்த்தி செய்திருந்தார்.

இந்த சாதனையை வெறுமனே 16 இன்னிங்ஸ்களில் கடந்து தவான் சாதனை படைத்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் மந்தமானவர்கள் வரிசையில் சங்கா, மஹேல இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது.

மந்தமாக 1000 ஓட்டங்கள் கடந்த ஐந்துபேரில் 4  இலங்கையர் என்பதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் அனைவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் மகத்தான சாதனையாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மந்தமாக இந்த இலக்கை கடந்தவராக சங்ககாரா (38  இன்னிங்ஸ்களில் ) காணப்படுகின்றார்.பிரண்டன்   மக்கலம்(37 இன்னிங்ஸ்) மஹேல ஜெயவர்த்தன(35  இன்னிங்ஸ் ,சனத் ஜெயசூரிய ( 35 இன்னிங்ஸ்),அரவிந்த டி சில்வா (34 இன்னிங்ஸ்),ஸ்டிபன் பிளமிங் ( 33 இன்னிங்ஸ்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

எது எவ்வாறாயினும் 2015 உலக கிண்ண போட்டிகளில் மட்டும் தொடர்ச்சியான 4  சதம் விளாசிய சங்ககாரா, மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களில் 38 இன்னிங்ஸ்களில் விளையாடி  6 சதம் 11 அரைசதம் அடங்களாக்க 49.22 எனும் சராசரியில் 2219 ஓட்டங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.