#ICC Champions Trophy

மீண்டும் முக்கியமான போட்டியில் சொதப்பியது தென்னாப்பிரிக்கா

மீண்டும் முக்கியமான போட்டியில் சொதப்பியது தென்னாப்பிரிக்கா

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் மிக முக்கியமான போட்டியில் இன்று, இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கஅணி மோதுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாப்பிரிக்க அணி , முதலாவது இலக்குக்காக 17.3 பந்துப் பரிமாற்றங்களில் 76 ஓட்டங்களைக் சேர்த்த நிலையில் நிதானமாக ஆடிய ஹசீம் அம்லா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து குயின்ரன் டீ கொக் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட்
முறையில் வெளியேறினார்கள். அதன் பின்னர் டூபிளசீஸ் பாண்டியாவால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து மொறிஸையும், பிளக்வாயாவையும் பூம்ரா விரைவாக வெளியேறினார். பின்னர் ரபாடா, மோர்க்கல் ஆகியோர் புவனேஸ்வர்குமாரால் வெளியேற்றப்பட தென்னாப்பிரிக்க அணி 44.3 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் இந்தியா சார்பில் ஜஸ்பிறின்ட் பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா இரண்டு இலக்குக்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் ஒரு இலக்குக்கையும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வெற்றிபெற 50 பந்துப்பரிமாறங்களில் 192 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.