Foot Ball

5 வருடங்களின் பின்னர் லா லிகாவை மீட்டது ரியல் மட்ரிட்

5 வருடங்களின் பின்னர் லா லிகாவை மீட்டது ரியல் மட்ரிட்

நேற்று நடைபெற்ற மலாக்கா அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றதன் மூலம், 93 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது.

20 அணிகள் பங்குபற்றிய லா லிகா தொடரில் 38 போட்டிகளில் விளையாடிய ரியல் மட்ரிட் அணி 29 வெற்றிகள் 6 சமநிலைகளைப் பதிவு செய்து 93 புள்ளிகளுடன் சம்பியனானது.

பார்சிலோனா அணி 38 போட்டிகளில் 28 வெற்றிகள் 6 சமனிலைகளை பதிவு செய்து 90 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை கைப்பற்றியது. அத்திலெட்டிக்கோ மட்ரிட் அணி 78 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தை கைப்பற்றியது. முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் 2018 க்கான சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

செவில்லா அணி 72 புள்ளிகளுடன் நான்காமிடத்தைப் பிடித்து சம்பியன்ஸ் லீக் தொடரின் தகுதிச்சுற்றுக்கான இடத்தை உறுதிப்படுத்தியது.
இத்தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரராக பார்சிலோனா அணி வீரர் லெயனல் மெசி (37 கோல்கள்) திகழ்கிறார்.

இத்தொடரில் அதிக ஹற்றிக் கோல்களைப் பெற்ற வீரராக ரியல் மட்ரிட் நட்சத்திர வீரர் கிரிஸ்ரியானொ ரொனால்டோ (2 ஹற்றிக்) திகழ்கிறார்.

இச்சம்பியனுடன் ரியல் மட்டிட் அணி 33 லா லிகா சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது ரியல் மட்ரிட் அணி. அடுத்தபடியாக பார்சிலோனா அணி 24 சம்பியன் பட்டங்களையும் அத்திலெட்டிக்கோ மட்ரிட் அணி 10 சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.