Results

கால்பந்தாட்டத்தில் கலக்கும் மன்னார் புனித சவேரியார் …!

வடமாகாண கல்வித்திணைக்களத்தால் 2017 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மட்ட உதைபந்தாட்டப்போட்டிகள் கடந்த 15-05-2017 தொடக்கம் 17-05-2017 வரையான 3 நாட்களாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் அரியாலை உதைபந்தாட்ட அரங்கு , சென்ற் ஜோன்ஸ் கல்லூரி மைதானங்களில் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டிகளில் 18 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியை எதிர்கொண்ட மன்னார் புனிதசவேரியார் ஆண்கள் கல்லூரி ( mn/st xaviers boys college) 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிண்ணத்தைக் கைப்பற்றி தேசியமட்ட போட்டிக்கு செல்லவுள்ளது.

இரண்டாம் இடத்தை யாழ் மத்திய கல்லூரியும் (jaffna central college)மூன்றாம் இடத்தை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியும்((jaffna st patricks college)பெற்றுக்கொண்டன.

நான்காம் இடத்தை வளர்ந்து வரும் சிறப்பான அணியான வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

இதேவேளை 20 வயதுப்பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை எதிர்கொண்ட மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 3-0 என்ற அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப்பெற்றது .

20 வயதுப்பிரிவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தைக்கைப்பற்றியது. மூன்றாம் இடத்தை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகளில் முதல்மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட அணிகள் தேசியமட்டப்போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப்பெற்றுக்கொண்டுள்ளன.

#இராகுலன் இராசதுரை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.