West Indies

இடதுகை துடுப்பாட்ட வீரர்களுக்கே முன்னோடியான லாராவின் சாதனைகள் ஒரு பார்வை : பிறந்த நாள் சிறப்பு பகிர்வு.

உலகக் கிண்ணங்களை வெற்றி பெற்றுத் திளைத்திருந்த காலத்தில், மேற்கிந்தியத் தீவு அணிக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே பிரைன் சார்ள்ஸ் லாரா.

அனைத்து இரசிகர்களின் விருப்பமும் இந்த லாரா மேல் இருந்தது என்பதை யாரும் மறுக்கவும் இயலாது. 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலே லாகூரில் அறிமுகமானார்.

அதே வருடத்திலேயே பாகிஸ்தானுக்கு எதிராக, டிசெம்பர் மாதத்திலே டெஸ்ட் போட்டிகளிலே அறிமுகமாகியிருந்தார்.
131 டெஸ்ட் போட்டிகளில், 232 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 11953 ஓட்டங்களை 52.89 எனும் சராசரியில் குவித்துள்ளார். அதிகூடிய ஓட்டங்களாக நாநூறு ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரராவார். 34 தடவைகள் சதம் அல்லது சதத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களையும், 48 தடவைகள் அரைச்சதம் அல்லது அரைச்சதத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 1559 நான்கு ஓட்டங்களையும், 88 ஆறு ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளார்.
299 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 289 தடவைகள் துடுப்பெடுத்தாடி, 10405 ஓட்டங்களை 40.17 எனும் சராசரியில் குவித்துள்ளார். அதிகூடிய ஓட்டங்களாக 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 19 தடவைகள் சதம் அல்லது சதத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களையும், 63 தடவைகள் அரைச்சதம் அல்லது அரைச்சதத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 1035 நான்கு ஓட்டங்களையும், 133 ஆறு ஓட்டங்களையும் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலே தனிப்பட்ட ஒரு வீரனால் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக 400 எனும் ஆட்டமிழக்காத ஓட்டங்களை இங்கிலாந்து அணிக்கெதிராக 2004ம் ஆண்டு பெற்றுக் கொண்டார். லாரா மாத்திரம் தான் சதம், இரட்டைச் சதம், முச்சதம் அதனோடு  நாநூறினையும் பெற்ற ஒரே வீரராவார்.

அதேபோல முதற்தரப் போட்டிகளிலே 501 எனும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்த 501 ஓட்டங்களை 427பந்துகளை சந்தித்து, 474 நிமிடங்கள் பொறுமையாக துடுப்பெடுத்தாடி, 10 ஆறு ஓட்டங்கள், 62 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாகப் பெற்றுக் கொண்டார். இதுவரை யாருமே இந்த சாதனைகளை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கன்னிச் சதத்தினை சிட்னி மைதானத்தில் பெற்று அந்தப் போட்டியில் 277 ஓட்டங்களைக் குவித்த காரணத்தால் கூட தனது மகளிற்கு “சிட்னி” எனப் பெயர் சூட்டினார்.

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றின் ஒரே ஓவரில் 28 ஓட்டங்களை தென்னாபிரிக்காவின் ரொபின் பிட்டர்சனின் பந்துவீச்சில் 2003 இல் பெற்றுக் கொண்டார். இதே ஓட்டங்களை 2013இல் அவுஸ்ரேலிய அணியின் ஜோர்ஜ் பெயிலியும் பெற்றுக் கொண்டார்.
ஒன்பது தடவைகள் இரட்டைச் சதத்தினைக் கடந்துள்ளார். அணித்தலைவராக ஐந்து தடவைகள் இரட்டைச் சதத்தினைப் பூர்த்தி செய்திருந்தார். இதுவரை 12 தடவைகள் சேர்.பிரட்மனும், அதற்கு அடுத்தபடியாக 11 தடவைகள் குமார் சங்கக்காராவும் இரட்டைச் சதத்தினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1995இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலே தொடர்ச்சியான மூன்று சதங்களினைப் பெற்று அந்தத் தொடரிலே தொடர் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்ட இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பேட்டியொன்றிலே, லாராவிற்கு பந்து வீச கஷ்டம் என்ற ரீதியில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இப்படித் தொடர்ச்சியாக பலரால் புகழப்பட்ட லாராவிற்கு இன்றைய தினம் நாற்பத்து எட்டாவது பிறந்தநாள். விளையாட்டு.கொம் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லாரா.

Happy Birthday The Legend LARA 

#கிருத்திகன்_நடராஜா

1 Comment

1 Comment

  1. udaya

    May 2, 2017, 4:39 pm at 4:39 pm

    Arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.