India

ICC சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியை அறிவித்தார் கிளார்க்..!

ICC சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியை அறிவித்தார் கிளார்க்..!இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

குறித்த கால எல்லை நிறைவுக்கு வந்தும், இந்திய அணியின் விபரம் மட்டும் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அணி தொடர்பிலான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும், தற்போது IPL போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றும் மைக்கல் கிளார்க் தனது தெரிவிலான இந்திய அணியை அறிவித்துள்ளார்.

இந்த அணியில் சிக்கார் தவான் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெறவில்லை.

அணிவிபரம்-ரோஹித் சர்மா, அஜிங்க்யா ரஹானே, விராட் கோஹ்லி (தலைவர்), யுவ்ராஜ் சிங் , MS டோனி (விக்கெட்காப்பாளர் ), மனிஷ் பாண்டே, கேதார் யாதவ் , ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பூம்ரா , மொஹம்மட் சாமி .

1 Comment

1 Comment

  1. Neethan

    April 30, 2017, 11:36 pm at 11:36 pm

    Good work

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.