England

25 வயதான இங்கிலாந்தின் இளம் சகலதுறை வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்..!

 

இங்கிலாந்து தேசிய அணியின் வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான 25 வயதான சாபார் அன்சாரி திடீரென கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகம் மேற்கொண்ட இவர், இந்தியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியிலும் இடம்பிடித்து 2 போட்டிகளில் ஆடியிருந்தார்.

சங்கக்காரவும் அங்கம் வகித்து விளையாடும் இங்கிலாந்தின் சர்ரே பிராந்திய அணிக்காக 8 வயதிலிருந்து அங்கத்துவம் பெற்று விளையாடிவரும் அன்சாரி, திடீரென ஓய்வை அறிவித்துள்ளமை கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளது.

இப்போதுதான் கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்துள்ளவர், அதுவும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்து வெறுமனே 3 டெஸ்ட் போட்டிகளுடன் விடைபெறுவது வேதனையானதே.

இந்த முடிவு மிக கடினமானதாகவே இருந்தாலும், கிரிக்கெட் போன்று தான் நேசிக்கும் சட்டத்துறையில் ஈடுபடவுள்ளதாகவும் அன்சாரி அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.