#ICC Champions Trophy

தவானின் அசத்தல் சதம்; 36 ஓட்டங்களின் வென்றது இந்தியா

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டியில் நேற்று (09) இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், இந்திய அணியால் அவுஸ்திரேலியாவிற்கு இமாலய வெற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவால் விடுக்கும் கையில் அஸ்தேரிலிய அணி செயற்பட்ட போதிலும் இறுதியில் 36 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 352 ஓட்டங்களை விளாசியிருந்தது. துடுப்பாட்டத்தில் சிகார்த் தவான் (117), விராத் கோஹ்லி (82), ரோஹித் சர்மா (57) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், மிச்சல் ஸ்டோனிஸ் (62/2) விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்து நிதானமாக ஆடிவந்தது. எனினும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடியது இருந்தபோதிலும் வெற்றி இலக்கைத் தொட முடியாமல் 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 316 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் (69), டேவிட் வோனர் (56), அதிரடி அரை சதம் கடந்த அலெக்ஸ் கரி (55-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் (50/3) விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.