#ICC Champions Trophy

இமாலய இலக்கை விரட்டிய பங்களாதேஷ்: 106 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பன்னிரென்டாவது போட்டியில் நேற்று (08) பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து அணி பங்களாதேஷை 106 ஓட்டங்களினால் தோற்கடித்துள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில், ஜசோன் ரோய் (153), ஜோஸ் பட்லர் (64), ஜோனி பயர்ஸ்டோவ் (51( ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், ஹசன் மிராஷ் (67/2, மொஹமட் சைப்புடின் (78/2) விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணியும் மிகச் சிறப்பாக செயற்பட்டது. எனினும் சகிப் அல் ஹசன் மட்டும் நிலைத்து நின்று ஆடி ஓட்டங்களை குவித்தார். இருந்தபோதிலும் அணியானது 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 280 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் சகிப் அல் ஹசன் (121), முஷ்பிகுர் ரஹிம் (44) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் (23/3), ஜோப்ரா அர்சர் (29/3) விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.