India

டோனியின் கையுறை விவகாரம்: ஐசிசியின் முடிவை ஏற்றது பிசிசிஐ

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் எம்.எஸ்.டோனியின் கையுறையில் இருந்த இராணுவ முத்திரையை அகற்ற வேண்டும் என்று அண்மையில் சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ரோய் தெரிவிக்கையில்,

நாங்கள் எமது விளக்கத்தை தெளிவாக ஐசிசியிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் அதுபோல் பயன்படுத்த வேறு எந்த வீரர்களுக்கும் தாம் அனுமதி வழங்கவில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. எனவே அவர்களது முடிவை புறக்கணிக்க முடியாது, அதன் வழியிலேயே செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.