#ICC Champions Trophy

போராடித் தோற்றது மேற்கிந்திய தீவுகள்

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பத்தாவது போட்டியில் இன்று (06) அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில், பந்துவீச்சினால் அவுஸ்திரேலியாவை அச்சுறுத்திய மேற்கிந்தியதீவுகள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட போதிலும் இறுதி நேரத்தில் சொதப்பிய நிலையில் 15 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளனர்.

போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் 79 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து இக்கட்டான நிலையில் காணப்பட்டது. எனினும் பின்னர் வந்த வீரர்கள் சுதாகரித்து அணியை தூக்கி நிறுத்தினர். இறுதியில் அணியானது 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில், கோல்டர் நீல் (92), ஸ்டீவ் ஸ்மித் (73), அலெக்ஸ் கரி (45) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், கார்லோஸ் ப்ரட்வைட் (67/3), அன்ரு ரசல் (41/2) விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியதீவுகள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்த போதிலும் இறுதி நேரத்தில் அதிரடிக்கு தயாரான போது சொதப்பினர். இதனால் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் சை ஹோப் 105 பந்தில் (68), ஜேசன் ஹோல்டர் (51) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் மச்சல் ஸ்ராக் (46/5), பட் கம்மின்ஸ் (41/2) விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.