#ICC Champions Trophy

உலகக் கிண்ணத்தில் மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்; வங்கப் புலிகள்

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (02) பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொண்டது.

இப்போட்டியில் மிகத் திறமையாக ஆடிய பங்களாதேஷ் அணி 330 ஓட்டங்களை விளாசியிருந்தது. இதன்மூலம், வரலாற்றுச் சிறப்பு மிக்க இல்கை நிர்ணயித்தது. இதன்படி தென்னாபிரிக்க அணியை 21 ஓட்டங்களினால அபாரமாக வெற்றி கொண்டுள்ளனர்.

போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் 75 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது. பின்னர், ஜோடி சேர்த்த சகிப் – ரஹிம் ஆகியோர் வெளுத்து வாங்க அணி பலம் பெற்றது. அவர்கள் இருவரும் 142 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர். இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து அபாரமாக 330 ஓட்டங்களை பெற்றனர்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 329 ஓட்டங்களே அதிக கூடிய எண்ணிக்கையாக இருந்தது.

துடுப்பாட்டத்தில், முஷ்பிகுர் ரஹிம் (78), சகிப் அல் ஹசன் (75), மஹ்மதுல்லா (46-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில், அன்டில் பெஹ்லுஹ்வாயோ (52/2), இம்ரான் தாஹிர் (57/2) விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், 330 ஓட்டங்கள் என்னும் இமாலய இலக்கை விரட்டியடிக்கக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை மட்டுமே பெற்று 21 ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், பப் டு ப்ளசிஸ் (62), ஜேன்போல் டுமினி (45) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில், முஷ்தாபிசுர் ரஹ்மான் (67/3), மொஹமட் சைப்புடின் (57/2), சகிப் அல் ஹசன் (50/1) விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.