Sri Lanka

“கவுன்டி மைதானம் – பிறிஸ்ரல்” உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப்பார்வை..!!

"கவுன்டி மைதானம் - பிறிஸ்ரல்" உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப்பார்வை..!!

2019 உலகக் கிண்ணப் போட்டிகள் இன்னும் 4 நாட்களில் கோலாகலமாக ஆரம்பிக்கப் போகின்றன. இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய தேசங்களில் 11 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு ஆடுகளங்களினதும் தன்மைகள், அந்த ஆடுகளங்களினது பழைய புள்ளிவிபரங்களை மீட்டிப் பார்ப்பதே விளையாட்டு. கொம் வழங்கும் “உலக கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப்பார்வை” தொடர் கட்டுரையின் நோக்கமாகும். அந்த வகையில் பிறிஸ்ரலில் உள்ள கவுன்டி மைதானத்தை பற்றி விரிவாக ஆராயப்படுகின்றது.

கவுன்ரி மைதானம்பிறிஸ்ரல்

துடுப்பாட்ட வீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகத்தன்மையை வழங்கக் கூடிய ஒரு மைதானம். கடந்த 10 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 250 ஆக காணப்படும் அதே வேளை கடந்த 5 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 272 ஆக காணப்படுகின்றது.

பொதுவாக இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகத்தை வழங்கும் நிலையே காணப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற 5 போட்டிகளில் 3 இல் இரண்டாவதாக ஆடிய அணியே வென்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக பெறப்பட்ட 369 ஓட்டங்களே இம்மைதானத்தில் பெறப்பட அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். பாகிஸ்தானிற்கு எதிராக இங்கிலாந்தால் பெறப்பட்ட 359 ஓட்டங்களே அதிக பட்சமாக துரத்தி அடிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையாக காணப்படுகின்றது.

300 ற்கு மேற்பட்ட ஓட்டங்கள் இதுவரை ஒரே ஒரு தடவை மாத்திரமே விரட்டி அடிக்கப்பட்டதோடு, 250+ ஓட்டங்கள் 3 தடவைகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இம் மைதானத்திலேயே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளோடு மோதுவதோடு, மொத்தமாக மூன்று போட்டிகள் இம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

பிறிஸ்ரல் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகள்

இலங்கை 🇱🇰 அணி இம்மைதான்தில் ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு தோல்வியை சந்தித்த அதே வேளை ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இம்மைதானத்தில் பங்குபற்றிய ஒரேயொரு போட்டியில் பங்களாதேஷ் வென்றிருக்கிறது. பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகள் இம்மைதானத்தில் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றியைப் வென்றுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.