Bangladesh

அயர்லாந்தை அதிரடியாக தோற்கடித்தது பங்களாதேஷ்

அயர்லாந்தை அதிரடியாக தோற்கடித்தது பங்களாதேஷ்

மேற்கிந்தியதீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோனத் தொடரின் 6வது போட்டி இன்று இடம்பெற்றது. இதன்படி, அயர்லாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன்போது, முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், போல் ஸ்ரில்லிங் (130), வில்லியம் போர்தல்பீல்ட் (94) ஓட்டங்களை பெற்றனர். பங்களாதேஷின் பந்துவீச்சில், அபு ஜயெட் (58/5) விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணி வெறும் 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை அதிரடியாக பெற்று அயர்லாந்தை தோற்கடித்தது. துடுப்பாட்டத்தில், லின்ரன் தாஸ் (76), தமிம் இக்பால் (57), சகிப் அல் ஹசன் (50) ஓட்டங்களை பெற்றனர். அயர்லாந்தின் பந்துவீச்சில், போயட் ரங்கின் (48/2) விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகனாக அபு ஜயெட் தெரிவாகினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.