உள்ளுர் செய்திகள்

ஆர்பிஎல் தொடரில் டே டேவேல் சம்பியன்

ஆர்பிஎல் தொடரில் டே டேவேல் சம்பியன்

தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையையும் மற்றும் பலத்தினையும் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அணிக்கு பதினொருவர் கொண்ட, எட்டு அணிகளுக்கான 9வது றேஞ்சர்ஸ் பிரீமியர் லீக் (RPL) கிண்ண நிகழ்வானது கடந்த 19.04.2019 அன்று தம்பிலுவில் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நைட் ரைடர்ஸ், கிங் லெவன், கிங் கோப்ரா, ரோயல் சலன்சஸ், டே டேவேல், சன் ரைசஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கு பற்றின.

இவ்வாறாக ஆறு நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டி நிகழ்வு 12.05.2018 அன்று இடம்பெற்றது. இவ் இறுதி போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மற்றும் டே டேவேல் அணியும் மோதின, இப்போட்டியில் டே டேவேல் அணியினர் வெற்றிவாகை சூடினர். இதற்காக வெற்றி கிண்ணங்களை அதிதிகள் இணைத்து வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அதிதிகளாக பொறியியலாளர் வை.யுவேந்திரா, சிரேஷ்ட கிராம அலுவலர் கண.இராசரெத்தினம், றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி.அழகுதுரை, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.கணேஸ், தம்பிலுவில் மத்திய கல்லூரியின் ஆசிரியர் வ.ஜெயானந்தமூர்த்தி மற்றும் கே.எம்.ஆர் மொடோஸ் திருக்கோவில் உஉரிமையாளர் ஆர்.கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சுற்றுப்போட்டித் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு 1ம் இடத்திற்கு 80,000/=, 2ம் இடத்திற்கு 60,000/=, 3ம் இடத்திற்கு 40,000/=, 4ம் இடத்திற்கு 30,000/= பணப்பரிசில்களும், கேடயங்கள் மற்றும் பாதகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.