England

358 ஓட்டங்களை விரட்டியடித்து வென்றது இங்கிலாந்து

358 ஓட்டங்களை விரட்டியடித்து வென்றது இங்கிலாந்து

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று (14) இடம்பெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 44.5 ஓவர்களில் விரட்டியடித்த இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகின்றது. இதன்படி நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், இமாம் உல் ஹக் (151), அசிப் அலி (52) ஓட்டங்களை பெற்றனர். இங்கிலாந்தின் பந்துவீச்சில், கிரிஸ் வோகஸ் (67/4) விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. துடுப்பாட்டத்தில், ஜோனி பயஸ்டோவ் (128), ஜசோன் ரோய் (76) ஓட்டங்களை பெற்றனர். பாகிஸ்தானின் பந்துவீச்சில் எவரும் சோபிக்கவில்லை.

போட்டியின் நாயகனாக ஜோனி பயர்ஸ்டோவ் தெரிவாகினார். இத்தொடரில், இரு வெற்றிகளுடன் இங்கிலாந்து அணி 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.