IPL - Indian Premier League

வெற்றி பெற விரும்பினேன், விக்கெட் வீழ்ந்தது: சம்பியன் நாயகன் மாலிங்க

வெற்றி பெற விரும்பினேன், விக்கெட் வீழ்ந்தது: சம்பியன் நாயகன் மாலிங்க

இறுதிப் பந்தில் அவர்கள் ஒரு ஓட்டத்தை பெற்றால், அது சுப்பர் ஓவராக மாறும் என்று நினைத்தேன். ஆனால், நான் வெற்றி பெற விரும்பினேன். அதனால், தான் எனது விக்கெட்டுக்கு பந்து சென்றது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சம்பியன் நாயகன் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

சம்பியானகிய பின்னர், பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவருடன், மேலும் சில முக்கிய நபர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கிரான் பொலார்ட் – “இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது ரண்களை பெறுவதற்கு அழுத்தம் இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால், பும்ரா, மாலிங்க சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தனர்.”

சச்சின் டென்டுல்கர் – “டோனியின் ரண் அவுட் முக்கியமான தருணம். மாலிங்கவின் ஒரு ஓவர் மோசமாக இருந்தது. அதனால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், இறுதி ஓவரில் மாலிங்க அழகாக ஆட்டத்தை முடித்துவைத்தார்.”

மஹேல ஜெயவர்த்தன – “டோனி வெளியேறிய போது ஆட்டம் எம்மிடம் இருந்தது என்று நினைத்தேன். ஆனால், வட்சன் சிறப்பாக ஆடினார். ரோஹித் சில அருமையான முடிவுகளை எடுத்தார்.”

ரோஹித் சர்மா – “நாம் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம். முதன்மையான இரு அணிகளாக தகுதி சுற்றிற்கு வந்தோம். நாங்கள் திறனை, திறமையை ஆதரித்தோம். அதனால் வெகுமதி கிடைத்தது. மாலிங்கவின் மூன்றாவது ஓவர் மோசமாக இருந்தாலும் அவர் மீது நம்பிக்கை வைத்தேன்” என்று குறிப்பிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.