IPL - Indian Premier League

சென்னைக்கு இறுதி பந்தில் ஆட்டம் காட்டிய மாலிங்க. மும்பை சம்பியன்

சென்னைக்கு இறுதி பந்தில் ஆட்டம் காட்டிய மாலிங்க. மும்பை சம்பியன்

12-வது பருவகால ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சற்றுமுன் இடம்பெற்று முடிந்தது. இவ், இறுதி ஆட்டத்தில் நடப்புச் சமபியன் சென்னை சுப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாகவும் ஐபிஎல்லில் சம்பியனாகியுள்ளது.

இறுதிப்பந்துவரை, விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காத இந்த ஆட்டத்தில் இறுதிப்பந்தில் லசித் மாலிங்க விக்கெட் வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் த்ரில்லர் முறையில் சம்பாயனாகியது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், கிரன் பொலார்ட் (41-ஆட்டமிழக்காமல்), குயின்ரன் டி கொக் (29) ஓட்டங்களை பெற்றனர். ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை. தீபக் ஷஹார் (26/3), சருதல் தாகூர் (37/2), பந்துவீச்சில், இம்ரான் தாஹிர் (23/2) விக்கெட்களை கைப்பற்றினர்.

இதன்படி, சம்பியன் இலக்காக 150 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, தனது, முதல் விக்கெட்டை 33 ஓட்டங்களுக்கும், இரண்டாவதை, 70, மூன்றாவதை 73 ஓட்டங்களுக்கும் இழந்தது தடுமாறியது. எனினும், சுதாகரித்து ஆடிய சென்னைக்கு, இறுதி 6 பந்தில் 9 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. எனினும், மேலும் ஐந்து ஓட்டங்களை சென்னை அணி பெற்றுக்கொள்ள 19.4 வது பந்தில் வட்சன் ரண் அவுட் ஆகினார். அடுத்த, பந்தில் இரு ஓட்டங்கள் பெறப்பட்டது. இதன்படி, இறுதி பந்தில் இரு ஓட்டங்களை தேவைப்பட்டது. கடந்த ஓவர்களில் சிக்ஸ்ஸர்களை அள்ளி்க் கொடுத்த லசித் மாலிங்கவின் பந்துவீசுவதால் சென்னை வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு மோலோங்கியிருந்தது. ஆயினும், அபாரமாக செயற்பட்ட மாலிங்க எல்பிடபிள்யு முறையில் தாகூரை ஆட்டமிழகச் செய்து மும்பைக்கு சம்பியனை வென்று கொடுத்துள்ளார்.

இதன்போது, சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், சேன் வட்சன் (80), ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில், ஜஷ்விந்தர் பும்ரா (14/2), லசித் மாலிங்க (49/1) விக்கெட்களை வீழ்த்தினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.