கிரிக்கெட் செய்திகள்

பெண்கள் ரி-20 சவாலில் சுப்பர்நோவஸ் சம்பியன்

பெண்கள் ரி-20 சவாலில் சுப்பர்நோவஸ் சம்பியன்

பிசிசிஐயினால் நடாத்தப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான பெண்கள் ரி-20 சவால் தொடரில் ஐபிஎல் சுப்பர்நோவஸ் அணி சம்பியனாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ் பெண்கள் ரி-20 சவால் தொடர் ஒரேயொரு போட்டியாக நடாத்தப்பட்டது. குறித்த ஒரேயொரு போட்டியில் ஐபிஎல் ரயில்ப்ளாசேர்ஸ் அணியுடன் மோதிய ஐபிஎல் சுப்பர்நோவஸ் அணி சம்பியனாகியிருந்தது.

இந்நிலையில், மூன்று அணிகளுடன் நான்கு போட்டிகளை கொண்ட தொடராக இம்முறை பெண்கள் ரி-20 சவால் தொடர் நடாத்தப்பட்டது. இதில், ஐபிஎல் சுப்பர்நோவஸ், ஐபிஎல் ரயில்ப்ளாசேர்ஸ், ஐபிஎல் வேலோசிட்டி ஆகிய அணிகள் விளையாடியிருந்தன.

இத்தொடரின், இறுதி ஆட்டம் நேற்று (11) நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சுப்பர்நோவஸ் மற்றும் வேலோசிட்டி ஆகியன மோதிக்கொண்டது. இதில், சுப்பர்நோவஸ் அணி இரண்டாவது முறையாகவும் சம்பியனாகி அசத்தியுள்ளது.

இதன்போது, முதலில் ஆடிய மிதாலி ராஜ் தலைமையிலான வேலோசிட்டி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், சுஷ்மா வர்மா அதிகபட்சம் (40-ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில், லே தஹுஹு (21/2) விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சுப்பர்நோவஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்று வேலோசிட்டியை தோற்கடித்து, சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில், ஹர்மன்ப்ரித் கவுர் அதிகபட்சம் (51) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில், ஜகனரா அலாம் (21/2) விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் நாயகியாக ஹர்மன்ப்ரித் கவுரும், தொடரின் நாயகியாக ஜெமிமா ரொட்ரிக்ஸ்சும் தெரிவாகினார். 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.