கட்டுரைகள்

ரென்ற் பிறிஜ் மைதானம் – “உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப் பார்வை”

2019 உலகக் கிண்ணப் போட்டிகள் இன்னும் 17 நாட்களில் கோலாகலமாக ஆரம்பிக்கப் போகின்றன. இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய தேசங்களில் 11 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு ஆடுகளங்களினதும் தன்மைகள், அந்த ஆடுகளங்களினது பழைய புள்ளிவிபரங்களை மீட்டிப் பார்ப்பதே விளையாட்டு. கொம் வழங்கும் “உலக கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப்பார்வை” தொடர் கட்டுரையின் நோக்கமாகும். அந்த வகையில் இரண்டாவதாக நொட்டிங்காம்ஷெயரில் உள்ள ரென்ற் பிறிஜ் மைதானத்தை பற்றி விரிவாக ஆராயப்படுகின்றது.

ரென்ற் பிறிஜ் மைதானம்

இன்றைய காலகட்டத்தில் உலகத்தில் உள்ள துடிப்பாட்டத்திற்கு மிகவும் சாதகமான மைதானம். கடந்த 10 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 295 ஆக காணப்படும் அதே வேளை கடந்த 5 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 342 ஆக காணப்படுகின்றது.

பொதுவாக இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு சாதகத்தை வழங்கும் நிலையே காணப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற 13 போட்டிகளில் 7 இல் இரண்டாவதாக ஆடிய அணியே வென்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்திற்கெதிராக இங்கிலாந்தால் பெறப்பட்ட 350 ஓட்டங்களே அதிக பட்சமாக துரத்தி அடிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையாக காணப்படுகின்றது. 300 ற்கு மேற்பட்ட ஓட்டங்கள் இதுவரை 2 தடவைகள் விரட்டி அடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இரண்டாவது போட்டியான மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இம்மைதானத்திலே நடைபெறுவதோடு, மொத்தமாக ஐந்து போட்டிகள் இம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

இங்கிலாந்து அணிக்கு அண்மைக்காலத்தில் பல சாதனைகளைப் பெற்றுத்தந்த மைதானம். உலக சாதனை ஒட்ட எண்ணிக்கையான 481 உட்பட இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணி 5 தடவைகள் 350 ஓட்டங்களைக் கடந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்து அணி இங்கு பங்குபற்றிய 12 போட்டிகளில் 6இல் வெற்றி வகை சூடியுள்ளது. இந்திய, அவுஸ்திரேலிய அணிகளும் இம்மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் பெரும்பாலானவற்றில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.