Afghanistan

ஸ்கொட்லாந்து – ஆப்கானிஸ்தான் மோதல்: தொடரை வென்றது ஆப்கான்

ஸ்கொட்லாந்து – ஆப்கானிஸ்தான் மோதல்: தொடரை வென்றது ஆப்கான்

ஸ்கொட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்று ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (10) நடந்த 2வதும் இறுதியுமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் இரு ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், எம்.சி.மைக்லியேட் (100), கைய்ல் கோட்சேர் (79) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில், குல்பதின் நைய்ப் (72/3) விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹமத் ஷா (113), ஹஸ்மதுல்லா ஷஹிட் (59-ஆட்டமிழக்காமல்), மொஹமட் ஷஹ்ஷாட் (55) ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, அணியானது, 44.5 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களை பெற்றது. இதன் போது, மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதன்படி, 44.5 ஓவரில் 268 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்று டக்வேர்த் லூயிஸ் முறையில் தீர்மானித்து 269 ஓட்டங்களை பெற்றிருந்தமையினால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை தமதாக்கிக் கொண்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.