கட்டுரைகள்

“லண்டன் ஓவல் மைதானம்” – 2019 உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப் பார்வை

2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு வெறும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன. இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய தேசங்களில் 11 மைதானங்களில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆடுகளங்களினதும் தன்மைகள், அந்த ஆடுகளங்களினது பழைய புள்ளிவிபரங்களை மீட்டிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அந்த வகையில் முதலாவதாக லண்டன் ஓவல் மைதானத்தை பற்றி விரிவாக ஆராய்கிறது விளையாட்டு. கொம்.

லண்டன் ஓவல் மைதானம்

I

துடிப்பாட்டத்திற்கு சாதகமான ஒரு மைதானம். கடந்த 10 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 260 ஆக காணப்படும் அதே வேளை கடந்த 5 வருடங்களில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கை 287 ஆக காணப்படுகின்றது.

பொதுவாக இரண்டாவதாக துடுப்பைடுத்தாடும் அணிக்கு சாதகத்தை வழங்கும் நிலையே காணப்படுகின்றது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற 24 போட்டிகளில் 15 இல் இரண்டாவதாக ஆடிய அணியே வென்றமை குறிப்பிடத்தக்கது.

அதிக பட்சமாக துரத்தி அடிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையாக கடந்த மினி உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை 🇱🇰 அணி இந்தியாவுக்கு 🇮🇳 எதிராக பெற்ற 322 ஓட்டங்கள அமைந்துள்ளன. 300 ற்கு மேற்பட்ட ஓட்டங்கள் இதுவரை 4 தடவைகள் விரட்டி அடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியான தென்னாபிரிக்க – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி இம்மைதானத்திலே நடைபெறுவதோடு, மொத்தமாக ஐந்து போட்டிகள் இம் மைதானத்தில் நடைபெற உள்ளன.

இங்கிலாந்து அணிக்கு ராசியான மைதானம். இங்கு பங்குபற்றிய 16 போட்டிகளில் 11 வெற்றி வகை சூடியுள்ளது. இலங்கை, இந்திய, அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இம்மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் அரைவாசிக்கும் குறைவான போட்டிகளிலேயே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக பட்சமாக இம்மைதானத்தில் நியூசிலாந்து அணி பெற்ற 398 ஓட்டங்களே அமைந்துள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.