IPL - Indian Premier League

இறுதி ஆட்டத்திற்குள் அதிரடியாக நுழைந்தது சென்னை

இறுதி ஆட்டத்திற்குள் அதிரடியாக நுழைந்தது சென்னை

12-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோதப் போகும் அணியை தெரிவு செய்யும் போட்டியாக இன்று (10) நடைபெற்ற இறுதி தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆறு விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இவ் தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலில் ஆடிய டெல்லி கப்பிட்டல் அணி சென்னையின் சிறந்த பந்துவீச்சினால் ஓட்டங்களை பெறத் தடுமாறிய நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை 147 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் ரிஷப பாண்ட் (38) ஓட்டங்களை பெற்றார். சென்னையின் பந்துவீச்சில், டிவைன் ப்ராவோ (19/2) விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை அணி இலகுவான இலக்கை விரட்டக் களம் புகுந்தது. 4 விக்கெட்களை மட்டும் இழந்து 19 ஓவர்களில் வெற்றி இலக்கை தாண்டி 151 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கியது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சம் சேன் வட்சன் (50), பப் டு ப்ளசிஸ் (50) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். டெல்லியின் பந்துவீச்சில் எவரும் சோபிக்கவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.