Pakistan

வயது குழப்பம் தொடர்பில் அப்ரிடி விளக்கம்

வயது குழப்பம் தொடர்பில் அப்ரிடி விளக்கம்

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷஹிட் அப்ரிடி அண்மையில் எழுதி வெளியிட்ட அவரது “கேம் சேஞ்சர்” சுயசரிதையினால் அவரது வயது தொடர்பில் எழுந்த குழப்பத்திற்கு அவரே பதலளித்துள்ளார்.

குறித்த சுயசரிதையில் ஷஹிட் அப்ரிடி இதுவரை தனது வயது அதிகாரபூர்வமாக தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், தான் 1996ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது தனக்கு 16 வயது இல்லை, 19 வயது என்று எழுதியிருந்தார்.

இது, தொடர்பில் அப்ரிடி இப்போது ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், “எனது வயது குறித்து குழப்பம் ஏற்பட்ட காரணம், 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின்போது என் வயது எனக்குத் தெரியாமல் இருந்தது. தெரிவுக்குழுவினர் என் வயதைக் கேட்டபோது, மற்றவர்கள் என்னை என்ன சொல்ல சொன்னார்களோ அதையே கூறினேன். அது அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. அதனால் தான் குழப்பம் ஏற்பட்டது.

நான் பிறந்த கிராமத்தில் பிறப்பு சான்றிதழ் முறைகள் இருக்கவில்லை அதன்காரணமாக எனக்கு எனது ஆண்டு நினைவு இருக்கவில்லை. நான் சரியாக பிறந்தது 1977ம் ஆண்டு தான். சுயசரிதை நூலில் நூல் பதிப்பாளர் 1975ம் ஆண்டு என்று தவறாக பதித்துவிட்டார்” என்றும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.