IPL - Indian Premier League

அபார வெற்றியை பெற்றது டெல்லி: நாளை சென்னையுடன் மோதல்

அபார வெற்றியை பெற்றது டெல்லி: நாளை சென்னையுடன் மோதல்

12-வது ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி நேற்று முன் தினம் (07) நிறைவுற்றிருந்தது. நேற்று (08) இரண்டாவது தகுதிச் சுற்றுக்கான அணியை தெரிவு செய்யும் தெரிவுப் போட்டி நடைபெற்றது.

டெல்லி கப்பிட்டல் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிக் கொண்ட இத்தெரிவுப் போட்டியில் டெல்லி அணி ஒரு பந்து மீதமிருக்கையில் இரு விக்கெட்டுக்களினால் அசத்தலான வெற்றியை பெற்று தகுதிச் சுற்றுக்குள் நுழைந்திருக்கின்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இருந்த ஹைதராபாத் அணியானது சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து கொண்டிருந்தது. எனினும், வீரர்களினால் நின்றுபிடித்து ஆட முடியவில்லை. இதனால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணி சார்பில், மார்டின் கப்டில் (36), மணிஸ் பாண்டேய் (30), கேன் வில்லியம்சன் (28) ஓட்டங்களையும் பெற்று உதவினர்.

டெல்லியின் பந்துவீச்சில் கீமோ போல் (32/3), இஷாந் சர்மா (34/2) விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி ஆடக் களமிறங்கிய டெல்லி அணிக்கு ப்ரிதிவ் ஷவ் (58), ரிஷப பாண்ட் (49) அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். இவர்களின் துணையுடன் 19.5 வது ஓவரில் வெற்றி இலக்கை தாண்டிய டெல்லி 8 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டது.

ஹைதராபாத்தின் பந்துவீச்சில் ரஷிட் கான் (14/2), கேதர் அஹமட் (24/2), புவனேஷ்வர் குமார் (42/2) விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, நாளைய (10) தினம் இறுதிப் போட்டிக்குள் செல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கப்பிட்டல் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.