IPL - Indian Premier League

12-வது ஐபிஎல்: துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மிரட்டல்

12-வது ஐபிஎல்: துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மிரட்டல்

நடைபெற்றுவரும் 12-வது ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் எதிரணி வீரர்களை கதிகலங்க வைக்கும் வகையில் தமது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும், இந்திய வீரர்களுடன், அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, தென்னாபிரிக்க வீரர்களும் மிகச் சிறப்பாக பிரகாசித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, துடுப்பாட்டத்தில் டேவிட் வோனர் 8 போட்டிகளில் 1 சதம், 5 அரை சதம் அடங்கலாக (450) ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் இருக்கின்றார். அதேபோல், லோகேஸ் ராகுல் 9 போட்டிகளில் 1 சதம், 4 அரை சதம் அடங்கலாக (387) ஓட்டங்களுடன் இரண்டாமிடத்திலும், விராட் கோஹ்லி 9 போட்டிகளில் 1 சதம், 2 அரை சதம் அடங்கலாக (378) ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர்.

மேலும், அன்ரு ரசல் 8 இன்னிங்ஸ்களில் 3 அரை சதங்களுடன் (377) ஓட்டங்களுடன் நான்காமிடத்திலும், ஜோனி பயஸ்டோவ் 8 போட்டிகளில் 1 சதம், 1 அரை சதத்துடன் (365) ஓட்டங்களுடன் ஐந்தாமிடத்திலும், கிரிஸ் கெயில் 8 போட்டிகளில் 3 அரை சதங்களுடன் (352) ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

கிரன் பொலார்ட் 9 போட்டியில் 1 அரை சதத்துடன் (185) ஓட்டங்களை பெற்றார். சுனில் நரேன் 6 இன்னிங்ஸ்ஸில் (107) ஓட்டங்களை பெற்று அசத்தியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.